பைக் மீது கார் மோதல் விவசாயி பலி
ஓமலுார்: காடையாம்பட்டி, தளவாய்பட்டி, கோம்பையை சேர்ந்தவர் துரை, 55. நண்பர் சின்னராஜ், 57. விவசாயிகளான இவர்கள், நேற்று முன்தினம் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு, 9:00 மணிக்கு ஸ்பிளண்டர் பைக்கில் புறப்பட்டனர். சின்னராஜ் ஓட்டினார். தீவட்டிப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து வந்த, 'வோல்ஸ்வேகன்' கார், பைக் மீது மோதியது. இதில் இரு விவசாயிகளும் படுகாயம் அடைந்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. துரையை, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்தது தெரிந்தது. சின்னராஜ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.