20 ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
சேலம், சேலம், எஸ்.கொல்லப்பட்டியில், தமிழக விவசாயிகள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் தலைமையில் விவசாயிகள், முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு:தனியார் கல்குவாரி அமைத்து, 100 அடி ஆழத்துக்கு மேல் வெட்டி எடுத்துவிட்டதால் தற்போது ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. குறிப்பாக பாகல்பட்டியில் பாப்பன், தாழம்பூ, நல்லப்பன், ஈச்சாங்குட்டை, மாங்குப்பை, பூமிநாயக்கன்பட்டி, கீரைபாப்பம்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு, ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரை கொண்டு வர வேண்டும். தண்ணீர் வராததால் பல ஆண்டாக ஏரிகள் வறண்டுள்ளன. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு உபரிநீர் அல்லது மேட்டூர் உபரிநீர் மூலம், ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.