உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணினி பட்டா கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கணினி பட்டா கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தில், 95 குடும்பங்களுக்கு, 200 ஏக்கர் விவசாய நிலங்களில், 1988 - 89ல், அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அந்த நில ஆவணங்கள், கணினியில் பதிவு செய்யப்படாததால், கணினி பட்டா பெற முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு நலத்திட்டங்கள், வங்கிகளின் பயிர் கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள், நேற்று ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்துார் வட்ட கிளை தலைவர் கலைமணி தலைமை வகித்தார். அப்போது கணினி பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர். மாநில பொதுச்செயலர் நடராஜன், மாவட்ட செயலர் ராமமூர்த்தி, தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் தங்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி