உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வவ்வால் வேட்டை துப்பாக்கி சத்தத்தால் அச்சம்

வவ்வால் வேட்டை துப்பாக்கி சத்தத்தால் அச்சம்

சேலம்,சேலம், சூரமங்கலம், பழையூரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஆல, அத்தி மரங்களில், ஏராளமான வவ்வால்கள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. வெளியேற தயங்கிய மக்கள், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்று போலீசார் சோதனை செய்த போது, யாரும் இல்லை. அதேநேரம் சில வவ்வால்கள் சுடப்பட்டு கிடந்தன. இதனால் வவ்வால்களை வேட்டையாட வந்த கும்பல், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !