மேலும் செய்திகள்
அரசு பஸ் ஓட்டி வந்த டிரைவருக்கு திடீர் பாதிப்பு
18-Dec-2024
பெண் பயணி மயக்கம்:ஜி.ஹெச்.,க்கு பஸ்சைஓட்டிவந்த டிரைவர் சேலம், டிச. 18-சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து அரசு டவுன் பஸ், நேற்று மதியம் பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிருந்தது. டிரைவர் மோகன் ஓட்டினார். ஆட்டையாம்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழரசி, 28, பழைய பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு, ஜங்ஷனில் ஏறினார். அண்ணா பூங்கா அருகே வந்தபோது தமிழரசிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். சக பயணியர், தண்ணீர் கொடுத்தும் மயக்கத்தில் இருந்தார். இதனால் மோகன், உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு பஸ்சை ஓட்டிவந்து, அவசர சிகிச்சை பிரிவில் தமிழரசி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சைக்கு பின், தமிழரசி நலமானார். இதனால் டிரைவரை, மருத்துவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
18-Dec-2024