உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் கடையில் தீ: ரூ.3 லட்சத்துக்கு சேதம்

மொபைல் கடையில் தீ: ரூ.3 லட்சத்துக்கு சேதம்

ஓமலுார், ஓமலுார், காமலாபுரத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 29. காமலாபுரம் பிரிவு சாலையில், ஓடு வேயப்பட்ட சிறு கடையில் மொபைல் விற்பனை, சர்வீஸ் கடை வைத்துள்ளார். அங்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு, மொபைல் போனை சார்ஜரில் போட்டுவிட்டு, கடை ஷட்டரை பாதி இறக்கிவிட்டு, எதிரே உள்ள வங்கிக்கு சென்றார். சிறிது நேரத்தில் கடையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அருகே இருந்த நிதி நிறுவனம், தையல் கடைக்கும் தீயின் பாதிப்பு ஏற்பட்டது.ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை கட்டுப்படுத்தினர். போன், அதன் உதிரிபாகங்கள் உள்பட, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமானதாக, உரிமையாளர் தெரிவித்தார். சார்ஜரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !