என் பாரத இளைஞர்கள் முகாமில் தீ தடுப்பு ஒத்திகை
மேட்டூர்: பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி திட்டம், மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி சார்பில், 'என் பாரதத்துக்கான இளைஞர்கள்' சிறப்பு முகாம், கோனுார் ஊராட்சியில், ஒரு வாரம் நடக்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய முகாமுக்கு, மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவராம் தலைமை வகித்தார். 2ம் நாளான நேற்று, மேட்டூர் தீயணைப்பு மீட்பு குழு சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு, தீ தடுப்பு ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. கல்லுாரியை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வரும், 25ல் முகாம் நிறைவடைகிறது.