உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேங்காய் நார் மில்லில் தீ விபத்து; ரூ. 10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து; ரூ. 10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்

ஓமலுார்: தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.ஓமலுார் அருகே பி.நல்லாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பாலன், 55. இவர் அப்பகுதியில், ஒன்றரை ஏக்கரில் தேங்காய் நார் மில் வைத்துள்ளார். நேற்று மதியம், 2:00 மணிக்கு திறந்தவெளியில் கொட்டப்பட்டிருந்த நாரில், தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் அருகில் இருந்த நார் குவியலுக்கு தீ வேகமாக பரவியது.இதையடுத்து அங்கு வந்த, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்து புகை எழுந்தபடி இருந்ததால், சேலம் செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து, மூன்று வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அருகில் கிணற்றில் இருந்த தண்ணீரை எடுத்து, நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !