மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
01-Nov-2025
சேலம், கயிறு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 50. இவர் அதே பகுதியில் கயிறு தயாரிக்கும் ஆலை மற்றும் குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடோனை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் அடிப்படையில், சூரமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு வாகனத்துடன் சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த கயிறு, நார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Nov-2025