மேலும் செய்திகள்
சரக்கு வேன் மோதி பெயின்டர் பலி
17-May-2026
வாழப்பாடி:வாழப்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி, 60. அதே பகுதியில் தேங்காய் குடோன் வைத்துள்ளார். அங்கு நேற்று, 10,000க்கும் மேற்பட்ட தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. மாலை, 5:20 மணிக்கு, அந்த தேங்காய்களில் தீப்பற்றி எரிந்தது. அதை பார்த்தவர்கள் அளித்த தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 15 நிமிடத்தில் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 1,000க்கும் மேற்பட்ட தேங்காய்கள் கருகி நாசமாகின. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'குடோன் அருகே தீ வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தீப்பொறி பரவி, குடோனில் இருந்த சோவை மீது பட்டு, தேங்காயில் தீப்பிடித்து இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றனர்.
17-May-2026