உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த பசுவை கொட்டும் மழையிலும் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் விழுந்த பசுவை கொட்டும் மழையிலும் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தலைவாசல்,: தலைவாசல் அருகே சித்தேரி ஊராட்சி பள்ளக்காட்டை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 50. இவருக்கு சொந்தமான விவசாய கிணறு, 70 அடி ஆழத்தில் உள்ளது. 25 அடியில் தண்ணீர் உள்ள நிலையில், நேற்று மாலை பசு மாடு தவறி விழுந்தது. இதுகுறித்து ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, மாலை, 6:30 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு, 7:10க்கு அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கொட்டும் மழையிலும் கிணற்றில் கயிறு மூலம் இறங்கினர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசு மாட்டை, ஒரு மணி நேரத்தில் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மழையை பொருட்படுத்தாமல் மாட்டை மீட்டு கொடுத்ததால் அப்பகுதி மக்கள், தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ