வெள்ள பாதிப்பில் மீள இன்று 5 இடத்தில் ஒத்திகை
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் கனமழை ஏற்பட்டால், ஆற்றில் அதிகரிக்கும் நீர் பெருக்கால், மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்க, பேரிடர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, போலீஸ், தீயணைப்பு, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நெடுஞ்சாலை உள்பட தொடர்புடைய துறைகள் சார்பில், மாதிரி ஒத்திகை, ஜூன், 5ல்(இன்று) நடக்கிறது.அதன்படி மேட்டூர் வட்டத்தில் காவேரி பாலம் மற்றும் தங்கமாபுரிபட்டணம்; இடைப்பாடி வட்டத்தில் பூலாம்பட்டி; சங்ககிரி வட்டத்தில் காவேரிப்பட்டி அக்ரஹாரம் மற்றும் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில், காலை, 11:30 மணிக்கு நடக்கிறது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரி ஒத்திகை மட்டுமே. அதனால் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.