உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு

பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு

சேலம்: சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மல்லி பூ, கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 1,400 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல், 700க்கு விற்ற முல்லை, 800; 400க்கு விற்ற ஜாதி-மல்லி, 450; 250க்கு விற்ற கலர் காக்கட்டான், 400; 100க்கு விற்ற நந்தியாவட்டம், 180, 200க்கு விற்ற சின்ன நந்தியா-வட்டம், 300 ரூபாயாக உயர்ந்தது. அரளி, வெள்ளை அரளி தலா, 450 ரூபாய், மஞ்சள் அரளி, செவ்வரளி, ஐ.செவ்வரளி தலா, 500 ரூபாயாக விற்பனையானது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'சில நாட்களாக சேலம் மாவட்டம் முழுதும் கடும் பனிப்பொழிவால், அரளி, குண்டு-மல்லி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளன. விசேஷ நாட்களும் இல்லாத நிலையில் பூக்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை