மேலும் செய்திகள்
மதுரையில் தினமும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு
27-Oct-2026
ஓமலுார்: காங்கோ உள்ளிட்ட வெளிநாடுகளில், 'எபோலா' காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர்.இதனால் இந்தியா முழுதும் விமான நிலையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நபர்களை கண்காணிக்க, சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.ஒரு மாதமாக சேலம் விமான நிலையத்திலும் சுகாதாரத்துறையினர், 'டிஜிட்டல் தெர்மல் ஸ்கேனர்' மூலம், பயணியரை சோதனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் அதிகரித்துள்ளது.இதனால் ஓமலுார், சரக்கப்பிள்ளையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து இரு செவிலியர், தினமும், சேலம் விமானம் நிலையம் வந்து, பயணியரை பரிசோதிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
27-Oct-2026