உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபருக்கு 10 மாத சிறை

கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபருக்கு 10 மாத சிறை

சேலம், சேலத்தில், கஞ்சா விற்பனை செய்த காங்கோ நாட்டு வாலிபருக்கு, 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாசிநாயக்கன்பட்டி, பெட்ரோல் பங்க் எதிரில் டீச்சர்ஸ் காலனி பகுதியில், 2021 டிச., 18ல், அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்ற போது, வெளிநாட்டை சேர்ந்த இரண்டு பேர் கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில் அவர்கள், கென்யாவை சேர்ந்த ஜிகான்ஜி டேனியல், 29, காங்கோ நாட்டை சேர்ந்த நிஷாங்கி முன்யகசி சாமுவேல், 28, என்பதும், இருவரும் சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்க வந்து, விசா காலம் முடித்த பின் இங்கேயே தங்கிவிட்டதும் தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரையும் கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கு சேலம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஜிகான்ஜி டேனியல் இறந்து விட்டதால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நிஷாங்கி முன்யகசி சாமுவேலுக்கு, 10 மாத சிறை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி