மேலும் செய்திகள்
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு முதல்வர் நியமனம்
03-May-2025
சேலம், முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி வாயிலாக, சேலம் அரசு பொறியியல் கல்லுாரியில், 1.95 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம், கழிவறை, சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 1.52 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகம், ஆழ்துளை கிணறு அமைக்க அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ''உயர்கல்வித்துறை சார்பில், அரசு கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு பொறியியல் கல்லுாரியில், 388.92 சதுரமீட்டர் பரப்பில் நுாலகம், 6 கழிவறைகள், மகளிர் கல்லுாரியில், 295.89 சதுரமீட்டர் பரப்பில் ஆய்வக கட்டடம் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்,'' என்றார். மகளிர் கல்லுாரி முதல்வர் காந்திமதி உள்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
03-May-2025