உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலுவலகம் கட்டுதல், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடங்கள் கட்டுதல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தலைவர் திருமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். டவுன் பஞ்., மன்ற உறுப்பினர்கள், மருத்துவர் பிரபாகரன், பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி