உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இலவசமாக புடவை, மரக்கன்று வழங்கல்

இலவசமாக புடவை, மரக்கன்று வழங்கல்

மேட்டூர்: மேச்சேரி, மேட்டூர் பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள், மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டியில் நேற்று தேசிய கொடியேற்றி குடும்பத்துடன் கொண்டாடினர். முன்னாள் படை வீரர் முருகேசன் தலைமை வகித்தார். மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் பேசினார். பின் குழந்தைகளுக்கு ஓட்டம், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்-களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில், எம்.காளிப்பட்டியை சேர்ந்த, 25 துாய்மை பணியாளர்களுக்கு இலவசமாக புடவை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்-டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !