மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி
18-Oct-2025
பனமரத்துப்பட்டி:நிலவாரப்பட்டி கிராம வேளாண் முன்னேற்ற குழுவுக்கு, 'அட்மா' திட்டத்தில், ரபி பருவ சாகுபடி பயிற்சி நேற்று நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், ரபி பருவ சாகுபடி தொழில்நுட்பங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விளக்கினார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி வேளாண் அலுவலர் நத்தகுமார், தோட்டக்கலை உதவி அலுவலர் செந்தில்குமார், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா உள்ளிட்டோர், விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அனைத்து விவசாயிகளுக்கும் நொச்சி, ஆடாதொடா, வேப்பங்கன்று மற்றும் பழச்செடி தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டன.
18-Oct-2025