உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்ணை சீண்டியதில் 2 பிரிவினர் தகராறு சிறுவனை கடத்தி தாக்கிய கும்பல் கைது

பெண்ணை சீண்டியதில் 2 பிரிவினர் தகராறு சிறுவனை கடத்தி தாக்கிய கும்பல் கைது

வாழப்பாடி: சந்தைக்கு சென்ற பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம் செய்-துள்ளார். இதனால் வாலிபரை பெண்ணின் உறவினர் தாக்கி-யுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் உள்ளிட்ட பிரிவினர் சேர்ந்து, பெண்ணின் பகுதியை சேர்ந்த இளைஞரை கடத்தி சரமா-ரியாக தாக்கினர். இதில் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், திருமலைசமுத்-திரத்தை சேர்ந்தவர், 19 வயது பெண். கடந்த, 6ல் அதே பகு-தியில் சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலை சேர்ந்த விக்கி என்பவர், அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது-குறித்து அப்பெண், அவரது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர் வந்து, விக்கியை தாக்கிவிட்டு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், இரு பிரிவினர் இடையே தகராறாக மாறியுள்-ளது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் கூறியதாவது:சம்பவத்துக்கு மறுநாள், விக்கி உள்பட, 20 பேர் கும்பல், திரும-லைசமுத்திரத்தை சேர்ந்த ௨௦ வயது இளைஞரை, தண்ணீர் பந்தல் மயானம் அருகே பைக்கில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்-ளனர். இதுகுறித்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலை-மையில் சென்று, இளைஞரை மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதேநேரம் திருமலை சமுத்திரத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், தண்ணீர் பந்தலை சேர்ந்த ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு, 'எங்கள் பகுதி இளைஞரை விட வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தனர். பின் வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார், அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி, தண்ணீர் பந்தலை சேர்ந்தவரை மீட்டு, வீட்டுக்கு அனுப்பி-வைத்தார்.இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில், தண்ணீர் பந்தலை சேர்ந்த மணி, 32, ராமச்சந்திரன், 21, ராதாகிருஷ்ணன், 26, சதீஷ்-குமார், 25, அம்பேத்கர், 19, பரத், 20, ரகுராமன், 26, மற்றும் 18 வயது சிறுவன் என, 8 பேரை கைது செய்துள்ளோம். சிலர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகிறோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை