நெடுஞ்சாலை லாரியில் காஸ் கசிந்து தீ விபத்து
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே எட்டிக்குட்டைமேட்டில், தமிழக நெடுஞ்சாலைத்துறையின், 4 வழி சாலை பணி நடக்கிறது. அதன் சாலை ஓரம், பெயின்டால் கோடு போடும் பணியும் நடக்கிறது. புது சாலையில் கோடு போட, ஈச்சர் லாரியில், காஸ் சிலிண்டர் பயன்படுத்தி, நேற்று பணி நடந்தது. லாரியை, ஈரோடு மாவட்டம், நசியனுார், அடுக்குபாறையை சேர்ந்த ரவிக்குமார், 42, ஓட்டினார். அங்கிருந்து, 25 அடி துாரத்தில், கோடு போடும் பணியில், கடலுார் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த, 5 பேர் ஈடுபட்டனர்.மாலை, 4:45 மணிக்கு, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்-றியது. உடனே தகவல் கிடைத்து, அங்கு வந்த இடைப்பாடி தீய-ணைப்புத்துறையினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இத-னிடையே லாரி அருகே பணியில் ஈடுபட்டிருந்த மாதவன், 24, என்பவர் காலில் தீக்காயம் ஏற்பட்டதால், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.