மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
31-Oct-2025
சிறுமியுடன் திருமணம் தொழிலாளிக்கு 'போக்சோ'
02-Nov-2025
சேலம்:வாழப்பாடியில் இருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு, 9 மாத கர்ப்பிணியாக, 17 வயது சிறுமி, சமீபத்தில் வந்தார். மருத்துவர்கள் விசாரித்ததில், மல்லுாரை சேர்ந்தவர் என்பதும், 10 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 24, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. மருத்துவர்கள் தகவல்படி, மல்லுார் மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமியை பிரசாந்த் அழைத்துக்கொண்டு, வாழப்பாடி சென்று குடும்பம் நடத்தியதும் தெரிந்தது.இருப்பினும் திருமண வயதை எட்டும் முன் கல்யாணம் செய்து சிறுமியை கர்ப்பிணியாக்கியதாக, நேற்று முன்தினம், பிரசாந்த் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2025
02-Nov-2025