உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணமான ஒரே வாரத்தில் சிறுமி கர்ப்பம்; காதலன், கணவன் உட்பட 4 பேர் கைது

மணமான ஒரே வாரத்தில் சிறுமி கர்ப்பம்; காதலன், கணவன் உட்பட 4 பேர் கைது

ஆத்துார்; திருமணமான ஒரே வாரத்தில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவர, போலீசார் சிறுமியின் காதலன், கணவன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கீரிப்பட்டியைச் சேர்ந்த, 31 வயது கூலி தொழிலாளியுடன், ஜன., 20ல் திருமணமானது. மணமான ஒரு வாரத்திலேயே சிறுமி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த கணவர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவர், 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த தொழிலாளி, 'ஏற்கனவே கர்ப்பமானதை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். கருவை கலைத்து விட்டு வந்தால் தான் சிறுமியுடன் குடும்பம் நடத்துவேன்' என, கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனைக்கு, கருவை கலைக்க சிறுமியை அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்ததோடு, கருவை கலைக்க அழைத்து வந்ததாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து, ஆத்துார் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி, தம்மம்பட்டியைச் சேர்ந்த பூபாலகிருஷ்ணன், 27, என்பவரை காதலித்து, நெருங்கி பழகியதால் கர்ப்பமானது தெரிந்தது. இதனால், பூபாலகிருஷ்ணன், சிறுமியை மணந்தவர், அவரது சகோதரிகள், சிறுமியின் பெற்றோர் என, 8 பேர் மீது போக்சோ, குழந்தை திருமண பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்தனர். பூபாலகிருஷ்ணன், சிறுமியை மணந்தவர், சிறுமியின் பெற்றோர் என, நான்கு பேரை நேற்று கைது செய்த போலீசார், மற்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ