ரூ.3.70 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இடைப்பாடி: கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. 10 கிலோ வெள்ளாடு, 9,100 முதல், 9,900 ரூபாய்; செம்மறியாடு, 8,900 முதல், 9,300 ரூபாய் வரை விலைபோனது. 3,750 ஆடுகள் மூலம், 3.70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.இதுகுறித்து ஆடு வியாபாரிகள் சங்க சேலம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''தீபாவளியில் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை கொண்டு வந்தனர். விற்-பனையும் அமோகமாக நடந்தது,'' என்றார்.