ஆசிரியர் வீட்டில் 33 பவுன் திருடிய கரூர் பெண் மீது பாய்ந்தது குண்டாஸ்
இடைப்பாடி: இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமரவேல், 58. இவரது மனைவி ஜூலியும், அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.இவரது வீட்டில் கடந்த மாதம், 20ல், 33 பவுன் நகைகள், 31,500 ரூபாய் திருடுபோனது. விசாரணையில் கரூர், வெங்கமேடு, என்.கே.எஸ்., நகரை சேர்ந்த ரமணி, 36, என்ற பெண் திருடியது தெரிந்தது. அப்பெண்ணை, இடைப்பாடி போலீசார் கைது செய்து, 33 பவுன் நகைகளை மீட்டனர். அந்த பெண் மீது, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில், 23 திருட்டு வழக்குகள் இருப்பது, விசார-ணையில் தெரிந்தது.இதனால் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார். இதனால் ரமணி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது.