மேலும் செய்திகள்
சிறப்பு ரயில் திடீர் ரத்து
31-Mar-2025
சேலம்:கோரக்பூர் - திருவனந்தபுரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: உத்தரபிரதேசம், கோரக்பூர் ஸ்டேஷனில், 3வது வழித்தடம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ஏப்., 27(நாளை), மே, 1, 2, 4ல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே இயக்கப்படும் கோரக்பூர் - திருவனந்தபுரம் ரயில், ஏப்., 30, மே, 4, 6, 7ல், அதன் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் திருவனந்தபுரம் - கோரக்பூர் ரயில் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இயக்கத்தில் மாற்றம்கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி ஸ்டேஷன்கள் இடையே பொறியியல் பணியால், ஏப்., 26(இன்று), 29 காலை, 8:00 மணிக்கு, கோவையில் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியே நாகர்கோவில் செல்லும் கோவை - நாகர்கோவில் ரயில், திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
31-Mar-2025