உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணி மூப்பு அடிப்படையில் ஆட்சிக்குழு; உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தல்

பணி மூப்பு அடிப்படையில் ஆட்சிக்குழு; உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தல்

ஓமலுார்: பணி மூப்பு அடிப்படையில், ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இது குறித்து, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பெரியார் பல்கலையில் தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி, வேதியியல் துறைத்தலைவர் ராஜ் ஆகிய இரு பேராசிரியர்கள் மூத்த பேராசிரியராக கடந்த, 9ம் தேதி முதல் பதவி உயர்வு பெற்று விட்டனர். பேராசிரியர் நிலையில், ஆட்சிக்குழு உறுப்பினராக தொடர முடியாது என, தமிழக கவர்னர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு முறைப்படி, ஆசிரியர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில், இரண்டு மூத்த பேராசிரியர்கள் பட்டமளிப்பு விழா அணி வகுப்பில் கலந்து கொண்டு, பட்டங்கள் பெறும் மாணவர்களின் பெயரை வாசித்துள்ளனர். இது சட்ட அவமதிப்பு செயலாகும். அதனால் இருவருக்கும் வழங்கப்பட்ட, மூத்த உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் ஆகியோரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை