உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூளைச்சாவால் உறுப்புகள் தானம் தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

மூளைச்சாவால் உறுப்புகள் தானம் தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 51. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 2ல், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், திருச்சியை நோக்கி, கொப்பம்பட்டி, கல்லாங்குத்து பகுதியில் சென்றபோது, சாலை நடுவே இருந்த 'பேரிகார்டு' மீது மோதி விழுந்தார்.இதில் சுய நினைவு இழந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு ஏற்-பட்ட நிலையில் நேற்று முன்தினம், உயிரிழந்தார். அவரது குடும்-பத்தினர் விருப்பப்படி, ராஜாவின் உடல் உறுப்புகள் தானம் செய்-யப்பட்டன. தொடர்ந்து அவரது உடல், தம்மம்பட்டியில் உள்ள வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு ராஜாவின் உட-லுக்கு, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி, வருவாய்த்துறையினர், அரசு மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ