உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24

பருத்தி மகசூல் அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு பனமரத்துப்பட்டி, ஜூன் 24

பருத்தி மகசூலை அதிகரிப்பது குறித்து, மத்திய பருத்தி மேம்பாட்டு நிலைய அதிகாரிகள் வயல் ஆய்வு மேற்கொண்டனர்.பனமரத்துப்பட்டி, ஏர்வாடி அருகேயுள்ள ஏர்சனம்பட்டி கிராமத்தில், மத்திய அரசின் பருத்தி மேம்பாட்டு அதிகாரிகள் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில், நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். நாக்பூர், பருத்தி மேம்பாட்டு நிலைய இயக்குனர் டாக்டர் அரவிந்த்வக்மோரே தலைமையில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் உள்பட ஏழு பேர் அடங்கிய குழுவினர், பருத்தி சாகுபடி வயலை பார்வையிட்டனர்.பருத்தி சாகுபடியில் உள்ள பிரச்னை, நோய் மேலாண்மை, மகசூலை அதிகரிக்கும் வழி முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கமலம் மற்றும் பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ