| ADDED : பிப் 23, 2024 02:01 AM
நங்கவள்ளி:பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையே, 2023-24ம் ஆண்டுக்கு, மண்டல அளவில் மகளிர் தடகள போட்டி, சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில் நடந்தது. அதில் வனவாசி அரசு பாலிடெக்னிக் மாணவியர் கீதா, புனிதவள்ளி, லக்ஷனா, சந்தியா, அபினயா, சுமித்ரா, சுபாஸ்ரீ ஆகியோர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 44 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். அவர்களை, வனவாசி பாலிடெக்னிக் முதல்வர் ஜெகதீசன் உள்ளிட்ட ஆசிரியர்கள், நேற்று பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற அனைவரும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.