உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சேலம், சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லுாரியின், 30 வது இளங்கலை பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.முதல்வர் தேவிமீனாள் வரவேற்றார். சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: டெல்லியில் உள்ள டிபார்ட்மென்ட் ஆப் ஹெல்த் சயின்ஸ் சார்பில், சேலம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, 'சர்டிபிகேட் ஆப் அப்ரிசியேஷன் இன் இம்ப்ரூமென்ட் இன் மல்டி டிசிபிளனரி ரிசர்ச் யூனிட்' என்ற சான்றிதழ் வழங்கியுள்ளது. சேலம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு ரூ.65.35 கோடியில் உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா, சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, லீனியர் ஆக்சிலேட்டர், பிராக்கி தெரபி, அதிநவீன கோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை, கேத்லேப், டிஜிட்டல் ரேடியோகிராபி தெரபி உள்பட அதிநவீன மருத்துவ கருவிகள், மருத்துவ வசதிகளை முதல்வர் கடந்த, 4 ஆண்டுகளில் வழங்கியுள்ளார்.கல்லுாரியில், ரூ.51.98 கோடியில் செவிலியர் பள்ளி கட்டடம் கட்டப்படு கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், ரூ. 2.26 கோடி சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக்கு அதிநவீன கருவிகள் வாங்கவும், குழந்தைகள் நலப்பிரிவு மேம்படுத்தும் பணிக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 நகர்புற நலவாழ்வு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பேசினார்.100 இளங்கலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கி அமைச்சர் சுப்பிரமணியன் கவுரவித்தார். கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை