உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வள்ளி, கும்மி கலைஞர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கல்

வள்ளி, கும்மி கலைஞர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கல்

சங்ககிரி, கொங்குநாடு கலைக்குழுவினர் நடத்திய சங்ககிரி தீரன் வள்ளி, கும்மி நடனம் நேற்று முன்தினம் இரவு சங்ககிரியில் நடந்தது. கின்னஸ் ரெக்கார்ட் செய்த குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் கடந்தாண்டு பெண்கள், சிறுமியர் என, 15 ஆயிரம் பேர் வள்ளி, கும்மி நடனத்தில் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அதில் கலந்து கொண்ட வள்ளி, கும்மி கலைஞர்களுக்கு கின்னஸ் சாதனை சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடந்தது. கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, 500 பேர் பங்கேற்ற வள்ளி, கும்மி நடனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ