தொடர்ந்து குற்றங்கள் 5ம் முறை குண்டாஸ்
சேலம்:சேலம், பள்ளிப்பட்டி தைலானுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 40. இவர் கடந்த மாதம், 13ல் சின்ன வீராணத்தில் கோவிந்தன் என்பவரை கத்தி முனையில் மிரட்டி, பணம் பறித்தார். அதற்கு முன், ஜூன், 2ல், வீராணத்தில் ஒருவரை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். இதில் அவரை, வீராணம் போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே அவர், 2013, 2016, 2019, 2023 ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் நேற்று உத்தரவிட்டார். இதனால், 5ம் முறை அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.