மேலும் செய்திகள்
குண்டாசில் சிக்கிய கஞ்சா வியாபாரி
26-Jul-2025
சேலம், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரிடம், சில நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் கத்திமுனை யில், 3,000 ரூபாய் பறித்தனர். இதை தட்டி கேட்க முயன்ற மக்கள் மீது, கற்கள், கட்டைகளை வீசி மிரட்டல் விடுத்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த கதிர்வேல், 20, மோகன்ராஜ், 19 ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.
26-Jul-2025