உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

சேலம், சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார், கிடையூரை சேர்ந்தவர் கனகராஜ், 34. இவர் கடந்த ஆக., 14ல், சங்ககிரியில் நடந்து சென்ற கொண்டிருந்த முருகேசன், 54, என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 2,200 ரூபாயை பறித்துக்கொண்டார். இதுகுறித்து முருகேசன் புகார்படி, சங்ககிரி போலீசார், கனகராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது, சங்ககிரி போலீசில் கொலை முயற்சி வழக்கு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொலை வழக்கு இருப்பது தெரிந்தது. இதனால் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று உத்தரவிட்டார். இதனால் கனகராஜ் மீது குண்டாஸ் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை