உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் அரிசி கடத்தியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், சேலம், பூலாவரி அக்ரஹாரத்தில் கடந்த ஜூன், 26ல் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், சரக்கு வேனில், 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஜாரி கொண்டலாம்பட்டி ரங்கதாஸ் தெருவை சேர்ந்த நடராஜ், 46, என்பவரை கைது செய்தனர். அவர் மீது, 4 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்திய, 7 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். அதன்படி நடராஜ் மீது குண்டாஸ் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை