உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிமகனை கொன்ற வழக்கு 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

குடிமகனை கொன்ற வழக்கு 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், சேலம், கன்னங்குறிச்சி, முருகன் கோவில் வட்டத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், 39, மற்றொரு மணிகண்டன், 36, பிருத்திகா கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் மணிவண்ணன், 36, கண்ணன், 30. இவர்கள், 4 பேரும், கடந்த செப்., 18ல் காரில், கன்னங்குறிச்சியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வீராணம் அருகே சித்தனுாரை சேர்ந்த சதீஷ், 'போதை'யில் இருந்த நிலையில், காரை வழிமறித்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த, 4 பேரும், சதீைஷ தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அவரது உடலை, குமாரபாளையம் காவிரி ஆற்றில் வீசினர்.கன்னங்குறிச்சி போலீசார், இரு மணிகண்டன், மணிவண்ணன், கண்ணன் ஆகியோரை, செப்., 22ல் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை