மேலும் செய்திகள்
மகாவீர ஆஞ்சநேயருக்கு 30ல் அனுமன் ஜெயந்தி விழா
26-Dec-2024
மேச்சேரி: மேச்சேரி கைகாட்டி வெள்ளாறு, வசந்தம் நகர் ராமபக்த ஆஞ்ச-நேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி பெருவிழா, வரும், 29ல் தொடங்க உள்ளது. அன்று காலை, 10:30 மணிக்கு வசந்த விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் அழைத்து வருதல், ஆஞ்சநே-யருக்கு பால், தீர்த்தக்குட அபிேஷகம், மஹா கும்பாபிேஷகம், ஆஞ்சநேயர் மூல மந்திரம், 108 கலச பூஜை, தீபாராதனை, கலச புறப்பாடு, கலச தீர்த்தம், சுவாமிக்கு சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல், மாலையில் வலசுபாளையம் சக்தி குழுவினரின் வள்ளி - பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கும்.வரும், 30 காலை, 6:00 மணிக்கு, 10,008 வடைமாலை அலங்-காரம், மஹா தீபாராதனை, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம், லட்-சார்ச்சனை, அனுமன் ஸகஸ்ர நாமம் அர்ச்சனை நடக்கும். மதியம், தங்ககவச அலங்காரம், தீபாராதனை, தரிசனம், லட்சார்ச்-சனை, மாலையில் லட்சார்ச்சனை பூர்த்தி, அன்னதானம் வழங்-குதல், ராமபக்த ஆஞ்சநேயர் உற்சவர் வீதி உலா நடக்கும்.
26-Dec-2024