விம்ஸ் வளாகத்தில் ஹரித் யோகா
சேலம், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில், பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து, 'ஹரித் யோகா' நிகழ்ச்சிகளை நடத்தின.சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், கல்லுாரி டீன் செந்தில்குமார், யோகாசன முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லுாரி உடற்பயிற்சி இயக்குனர் ஜெயபாரதி, யோகாசன பயிற்சி அளித்தார். குரும்பப்பட்டி பிரிவு வன காப்பாளர் சசிகுமார், 'போதிமரம்' முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் ராஜராஜேஸ்வரி, நிர்வாக தலைவர் ரமேஷ்குமார், கல்லுாரி மாணவர்கள், இல்ல முதியோர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அக்கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்வில், இந்தியன் யோகா சங்க உறுப்பினர் ரத்னா, சேலம் அரசு கல்லுாரி இணை பேராசிரியை பார்வதி, யோகாசன முறைகளை, மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர். மாணவர்கள் ஒன்றிணைந்து, யோகா சின்னத்தை வடிவமைத்தனர். முடிவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாட்டை, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், உடற்பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யா மற்றும் அருண்குமார், நிஷா செய்திருந்தனர்.