ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் பெடல் படகு இயக்கம் நிறுத்தம்
ஏற்காடு,: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்-துமஸ் பண்டிகையால், ஏற்காட்டுக்கு கடந்த, 23 முதல், சுற்றுலா பயணியர் அதிகளவில் வர தொடங்கினர். நேற்று முன்தினம் காலை முதல், பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. அப்-போதும் சுற்றுலா பயணியர் ரசித்தனர். தொடர்ந்து நேற்று, பனிமூட்டம் குறைந்து, 'குளுகுளு' சூழல் நிலவியது. மதியம், ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் கடுங்கு-ளிரும் நிலவியதால் சுற்றுலா பயணியர் சிரமத்துக்கு ஆளாகினர்.குறிப்பாகக படகு இல்ல ஏரியை பனிமூட்டம் சூழ்ந்ததால், சற்று தொலைவில் இருக்கும் படகு கூட தெரியவில்லை. இதனால் படகு இல்ல நிர்வாகம், பெடல் படகு இயக்கத்தை நிறுத்தியது. இதனால் சுற்றுலா பயணியர், மோட்டார் படகில் மட்டும் செல்ல வேண்டிய சூழல் உருவானது. அந்த படகும் குறைந்த அளவில் மட்டும் இருப்பதால், ஆர்வத்-துடன் வந்த சுற்றுலா பயணியர் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் பனிமூட்டதால் வாகன ஓட்-டிகளும் ஊர்ந்தபடி சென்றனர்.வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து, குளிர்ந்த சூழல் உருவானது.