உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடுரோட்டில் நின்ற பஸ் ஹே... தள்ளு தள்ளு

நடுரோட்டில் நின்ற பஸ் ஹே... தள்ளு தள்ளு

ஆத்துார், சேலம் மாவட்டம், ஆத்துார் - ராசிபுரம் சாலையில், சேலம் - விருதாச்சலம் தடத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. இதனால் ஹவுசிங் போர்டு, பெரியார் நகர் வழியே, ரயில்வே சுரங்கப்பால சாலை வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆத்துாரில் இருந்து, தம்மம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், ரயில்வே சுரங்கப்பால சாலையின் வேகத்தடைக்கு வந்தபோது, 'செல்ப்' எடுக்காமல் சாலை நடுவே நின்றது. இதனால், எதிரெதிர் திசைகளில் வந்த ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் பஸ்சில் வந்தவர்களும், மற்ற வாகனங்களில் வந்தவர்களும், அரசு பஸ்சை முன்புறமாக இருந்து தள்ளிவிட்டனர். ஒருவழியாக பஸ், 'ஸ்டார்ட்' ஆனது. இதனால் மதியம், 2:00 மணிக்கு, பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் அடுத்தடுத்து சென்றன. இதனால் அரை மணி நேரத்துக்கு மேல் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாக நேர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ