எருதாட்டத்தில் ஊர்காவல் படை வீராங்கனை காயம்
ஓமலுார்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஓமலுார், காமாண்டப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று எருதாட்டம் நடந்தது. 30க்கும் மேற்பட்ட காளைகளுடன் நடந்த எருதாட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். கூட்டத்தில் ஒரு காளை புகுந்ததில் நிலை தடுமாறி விழுந்த ஊர்காவல் படையை சேர்ந்த சித்ரா, 26, காமாண்டப்பட்டி அழகப்பன், 85, கம்பளத்தான், 24, ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அதேபோல் தும்பிப்பாடி பெருமாள் கோவில் பகுதியில், 15 காளைகளுடன் எருதாட்டம் நடந்தது.அதேபோல் தாரமங்கலம் அருகே வனிச்சம்பட்டி காளியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட காளைகளை இளைஞர்கள் பிடித்தபடி ஓடி மகிழ்ந்தனர்.