உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியருக்கு வீட்டு வேலை விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்

மாணவியருக்கு வீட்டு வேலை விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள, சமூக நீதி மகளிர் விடுதியில், 90 மாணவியர் தங்கி படிக்கின்றனர். அதன் காப்பாளராக சந்திரா, 45, பணியாற்றுகிறார். நேற்று முன்தினம், விடுதி மாணவியர், 4 பேரை, சந்திரா, ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். தொடர்ந்து மரக்கன்று நடவு செய்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை வைத்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் உத்தரவுபடி, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், விடுதி மாணவியர், காப்பாளர், சமையலர் உள்ளிட்டோரிடம் நேற்று விசாரித்தார். தொடர்ந்து சந்திராவை, 'சஸ்பெண்ட்' செய்து, ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ