உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.எல்.ஏ.,வை கைது செய்யாவிடில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்

எம்.எல்.ஏ.,வை கைது செய்யாவிடில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே, சமீபத்தில் பா.ம.க.,வினர் இடையே கலவரம் ஏற்பட்டது.இதில், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஆனால், ஒருவரை கூட கைது செய்யவில்லை எனக்கூறி, நேற்று, எஸ்.பி., அலுவலகத்தில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் முறையிட்டனர்.இதுகுறித்து எம்.எல்.ஏ., சதாசிவம் கூறுகையில், ''போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படக்கூடாது. அருள் தரப்பினர் மீது வழக்குப்பதிந்து, இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர். அதனால் அருள் உள்ளிட்ட ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ