உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

சேலம், கேரள மாநிலத்தில் உள்ளதை போன்று, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த வாரம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார். மாணவர்களுக்கு நினைவு திறன், கற்கும் திறன், கவன ஒருமைப்பாடு ஆகியவை அதிகரிக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என வலியுறுத்தும் இத்திட்டம், சேலத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.அரசு பள்ளிகளில காலை, 11:00 மணி, மதியம் 1:00 மணி, 3:00 மணி என மூன்று நிமிட இடைவெளி வழங்கப்படுகிறது. இதில், மாணவ, மாணவியர் தண்ணீர் குடிக்க, ஆசிரியர்களும் வலியுறுத்தினர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை 11:00 மணிக்கு வாட்டர் பெல் அடித்ததும், அனைத்து மாணவியரும், ஆர்வத்துடன் தண்ணீர் பருகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை