உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு

தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி மாதையன்குட்டை, அமைதி பூங்கா வளாகத்தில் எரிவாயு தகனமேடை உள்ளது. அதை பராமரிக்கும் அமைதி அறக்கட்டளை சார்பில் தகனமேடை அருகே தியானமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழக அரசின், 'நமக்கு நாமே' திட்டத்தில் அரசு நிதி, 12 லட்சம், அறக்கட்டளை நிதி, 6 லட்சம் ரூபாய் செலவில் தியான மண்டபம் கட்டப்பட்டது. இதர பராமரிப்பு பணி, 2 லட்சம் என, 20 லட்சம் ரூபாயில் பணி மேற்கொள்ளப்பட்டது.நேற்று, தியான மண்டப திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சந்திரா, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கமிஷனர் நித்யா, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், அமைதி அறக்கட்டளை தலைவர் சம்பத்குமார், செயலர் சந்திரமோகன், பொருளாளர் வெங்கடேஷ், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அமைதி பூங்கா சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ