விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் தொழில்துறை திறன் மேம்பாடு பயிற்சி
சேலம், சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், கதிரியக்கவியல் பிரிவு மூலம், தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாடு பயிற்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடந்தது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.புஜி பிலிம் ஹெல்த் கேர் இந்தியா நிறுவனத்தின், மூத்த மருத்துவ பயன்பாட்டு நிபுணர் இந்து, கதிரியக்கவியல் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம், இயந்திரங்கள், உபகரணங்கள் சார்ந்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து பயிற்சி அளித்தார். கதிரியக்கவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், துறையின் ஓராண்டு செயல்பாடுகள், மாணவர்களின் சாதனைகள் மற்றும் சிறப்பு கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, கதிரியக்கவியல் பிரிவு பொறுப்பாளர் கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், அல்போன்ஸ், ஆண்டனி காட்ஸன், தங்க குமரன், நிஷா செய்திருந்தனர்.