துாய்மை பணியாளரை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்
சேலம்: சேலத்தில் நேற்று, 3ம் நாளாக, இ.கம்யூ., கட்சியின், 26வது தமிழ் மாநில மாநாடு நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மா-னங்கள் வருமாறு: உள்ளாட்சிகளில் துாய்மை பணியாளர்கள், தற்போது கான்ட்ராக்ட் முறைக்கு மாற்றப்படுவதால் அவர்களது பணி, ஊதியம், சமூக பாதுகாப்பு பறிக்கப்படுவது, சமூக நீதிக்கு எதிரா-னது. அதனால் உள்ளாட்சி பணிகளை, கான்ட்ராக்ட் முறைக்கு மாற்றும் தவறான கொள்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். பஞ்சாலை உள்பட, 84 வகை தொழில்களுக்கு சட்-டப்படி குறைந்தபட்ச ஊதியத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். சென்னையில், 13 நாளாக அற வழியில் போராடிய துாய்மை பணியாளர்களை, போலீசாரை வைத்து அப்புறப்படுத்தி-யதோடு, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட, 3 வக்கீல்கள், 8 சட்ட கல்லுாரி மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீ-சாரின் அத்துமீறல், மனிதாபிமானமற்ற நடவடிக்கையை மாநாடு கண்டிக்கிறது. மேலும் தமிழ-கத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மை பணி-யாளர்கள், அறவழியில் போராடிய சென்னை துப்புரவு பணியா-ளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.