மேலும் செய்திகள்
குமுளி மலைப் பாதையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
16-Oct-2024
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்வீரபாண்டி ஒன்றியத்தில் ஆய்வுவீரபாண்டி, அக். 17-வீரபாண்டி ஒன்றியத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுலாத்துறை கமிஷனருமான சமயமூர்த்தி, நேற்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட, சீரகாபாடியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார். அங்கு தங்கி படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.விடுதியின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், காய்கறி தோட்டம் அமைத்து சமையலுக்கு தேவையான காய்கறி, கீரை வகைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான உதவிகளை தோட்டக்கலைத்துறை மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அங்கிருந்து, வேம்படிதாளம் ஊராட்சிக்கு சென்ற அவர், அங்கு கட்டப்பட்டுள்ள பொது நுாலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, சுற்றியுள்ள வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் விசைத்தறி மூலம் புடவை நெய்யப்படுவதை பார்வையிட்டு, நெசவாளர்களிடம் குறைகளை கேட்டார்.ஆய்வின் போது கலெக்டர் பிருந்தா தேவி, கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், வீரபாண்டி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சந்திரமலர், தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
16-Oct-2024