இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சங்ககிரி: சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரமேஷ், கிருஷ்-ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனுக்கு இடமாற்-றப்பட்டார். இதனால் கோவை மாநகரில் பணியாற்றிய ஜமுனா, சங்ககிரி ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அவர், நேற்று, சங்ககிரி ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.அதேபோல் ஆத்துார் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அழகு-ராணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதனால் கோவை மாநகர், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஆத்துார் டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்-பேற்றுக்கொண்டார்.